search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருசக்கர வாகனங்கள்"

    • திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் ஏற்கனவே பலமுறை வாகன திருட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து விடுதலை ஆனவர்.
    • பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும்.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் உட்கோட்டம் மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், சித்தாமூர், மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்ததோடு அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 60 இருசக்கர வாகனங்களை போலீசார் கைப்பற்றினர்.

    இந்த வழக்கு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் ஏற்கனவே பலமுறை வாகன திருட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து விடுதலை ஆனவர். விடுதலைக்கு பின் அவர் வேறொரு மாவட்டத்திற்கு சென்று அங்கு தங்கி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தனியாக நிற்கும் இருசக்கர வாகனங்களை திருடி நரிக்குறவர்களுக்கு விற்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    தற்போது செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர், சித்தாமூர், மதுராந்தகம், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடி இதே மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர்களுக்கு குறைவான விலையில் விற்று வந்துள்ளார். அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 60 இருசக்கர வாகனங்களை தற்போது பறிமுதல் செய்துள்ளோம். பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 4 இருசக்கர வாகனநிறுத்தங்களில் இந்த வாகனங்கள் நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் இருக்கிறது.
    • வாகனங்கள் குறித்து தெற்கு போலீசார் கணக்கெடுப்பு செய்தனர்.

     திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன நிறுத்தங்களில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் குறித்து தெற்கு போலீசார் கணக்கெடுப்பு செய்தனர்.

    அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2 வருடங்களாக 319 இருசக்கர வாகனங்கள் கேட்பாரற்று உள்ளன. 4 இருசக்கர வாகனநிறுத்தங்களில் இந்த வாகனங்கள் நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் இருக்கிறது. சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு வந்து வாகனங்களின் உரிமையை கோரலாம் என்று தெற்கு போலீசார் அறிவித்துள்ளனர்.

    ×